விராட் கோலி தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஜோமேட்டோ இன் வேடிக்கையான பதில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், அன்பாக்ஸ் செய்யாமலேயே  புதிய மொபைலை இழந்த சோக உணர்வை எதுவும் மிஞ்ச முடியாது என்று தெரிவித்தார். அதாவது, பாக்ஸை பிரித்து பார்ப்பதற்கு (அன்பாக்ஸ்)  முன்பே தனது போன் தொலைந்து விட்டதாக சோகத்துடன் தெரிவித்தார்.  அவரது ட்வீட் விரைவில் வைரலானது மற்றும் ஜோமேட்டோ அதற்கு ஒரு கமெண்ட் செய்தது.

இதற்கு பதிலளித்த சோமேடோ உங்கள் புதிய தொலைபேசி தொலைந்து போன சோகம் மறக்க ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து பாருங்கள் என பதிவிட்டு இருந்தது. ஜோமேட்டோ ட்விட்டரில் பாபியின் (அனுஷ்கா ஷர்மா) ஃபோனில் இருந்து ஐஸ்கிரீமை ஆர்டர் செய்ய  வேண்டும் என்று பதிலளித்தது. இந்த ட்வீட் பல எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அக்கறை காட்டினாலும், மற்றவர்கள் இது ஒரு விளம்பர வித்தையாக இருக்கலாம் என்று கருதினர்.

ஒரு பயனர், “பாபி ஸ்விக்கியைப் பயன்படுத்தினால் என்ன ஆகும். என்றார். “மற்றொரு பயனர், “நீங்கள் முதலில் ஐஸ்கிரீமை வழங்குவதற்கான முகவரியைக் கேட்டிருக்க வேண்டும். அவர் நிச்சயமாக இருக்கும் தொலைபேசியில் இருந்து பணம் செலுத்தியிருப்பார்.” என்றார். மேலும் ஒருவர் “நீங்கள் தான் உண்மையான பிசினஸ் மேன்… பாதகமான சூழ்நிலைகளிலும் லாபம் ஈட்டுவதற்கான சிறந்த யோசனைகள் உங்களிடம் உள்ளன” என்று  கருத்து தெரிவித்தார். இதேபோல பலரும் பலவித கமெண்ட் செய்து வருகின்றனர்..