இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கலாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை நாக்பூரில் காலை 09:30 மணிக்கு தொடங்குகிறது. இதனிடையே இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் சுழல் பந்தை ஸ்ட்ரைட் (நேராக) பேட்டில் ஆட வேண்டும் எனவும், இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். எனக்கும் ப்ரண்ட்  புட்டில் ஆடலாமா அல்லது  பேக் புட்டில் ஆடலாமா என குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்ட்ரைட் பேட்டில் ஆடுவதுதான் சரியான உத்தி எனவும் குறிப்பிட்டார்.