
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதிய கட்சியை தொடங்கினார். இவர்தான் பாஜக கட்சி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்ததோடு குஜராத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த மோடியை நாடு முழுவதும் பிரபலம் ஆக்கினார் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரிடம் தேர்தல் ஆலோசனைகளை கேட்டறிந்தனர். இன்று புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்த நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் பிறகு மதுவிலக்கு அமலில் இருப்பதால் பீகாருக்கு நஷ்டம் ஏற்படுகிறது எனவும் இதனால் தான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு கல்வியை முன்னேற்ற வேண்டும் என்று கூறிய பிரசாந்த் கிஷோர் உங்களுடைய குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என்றார். அதோடு பீகார் மாணவர்களை தாக்கிய மேற்கு வங்கத்திற்கும், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிற்கும் கேட்க வேண்டும் எனவும் பீகாரி குழந்தைகள் எங்கெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்களோ தாக்குதலுக்கு ஆளாகிறார்களோ அங்கெல்லாம் கேட்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் கட்சி ஆரம்பித்த முதல் நாளில் தமிழ்நாட்டைப் பற்றி அவர் விமர்சித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.