லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அமீர்கான், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரீ டிக்கெட் புக்கிங்கில் நூறு கோடி ரூபாய் வரை வசூல் செய்த கூலி திரைப்படம் இனிவரும் நாட்களில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில்  ரிலீஸ் செய்யும் நடைமுறை உள்ளது.

கூலி திரைப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால் ஃபேமிலி ஆடியோ தியேட்டருக்கு வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் செப்டம்பர் முதல் வாரம் ஓடிடியில் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.