தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி மக்களுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். போகி பண்டிகை அன்று துணி, ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடுவதோடு, மூச்சுத்திணறல் ,கண் எரிச்சல் போன்றவற்றால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.