வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளுமாறு ஆளுநர் ரவி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே, ஆளுநர் ரவிக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர், அண்மையில் சட்டமன்றத்தில் நேரடி மோதலாக மாறியது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுகவில் OPS, EPS இருவரும் பங்கேற்றுள்ளனர்.