
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை அதிமுக தடுத்த நிறுத்த போராடியது.
திருவிழாவில் மோர் குடித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. சித்திரை திருவிழாவிற்கு உறையூர் பகுதி மக்கள் மட்டும்தான் சென்றார்களா. இப்படி இருக்கும்போது அந்த பகுதி மக்களுக்கு மட்டும் ஏன் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
திமுக பாஜக கூட்டணி சேர்ந்த போது நாங்கள் மட்டும் கூட்டணி சேர்வதில் என்ன தவறு. அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். உங்களுக்கு ஏன் பயம். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் தான் இப்படி பேசுகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படுவதை நான் சட்டசபையில் நேருக்கு நேர் பார்த்தேன் என்றார்.