பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாகவும் வருகிற 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகும். அது மீன்கள் மூலமாக நம்மில் சென்ற புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருகின்றது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வருகின்ற 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக்க கழிவுகள் தான் அதிகமாக இருக்கும்.

அது மீன்கள் மூலமாக நம்முடைய குடலுக்குள் சென்று புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை உருவாக்கும். எனவே கடலில் பிளாஸ்டிக் கழிவு குறைத்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மீன் உணவுகள் உடலுக்கு ஏற்றது அதில் உள்ள ஒமேகா 3 இதய கோளாறு ஏற்படாமல் தடுக்கின்றது. சாதாரண படகுகள் மூலமாக மீன் பிடிப்பவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை மேற்கொள்ளவும் அதை அவர்கள் பயன்படுத்தவும் தேவையானவற்றை செய்ய வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் முதல்வர் அனுமதியுடன் புதுச்சேரி மீனவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.