இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக வெவ்வேறு வகையான பெட்டியில் உள்ளது. அதில் வசதிகளுக்கு ஏற்ப டிக்கெட் விலையும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஏசி பெட்டிகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் அதிக விலை இருக்கும். ரயில் பெட்டியில் முதல் ஏசியை விட இரண்டாவது ஏசி காண கட்டணம் மிகவும் குறைவு தான். மூன்றாவது ஏசி கோச்சிங் கட்டணம் இன்னும் குறைவு. இதற்குப் பின்னர் தான் ஸ்லீப்பர் கோச் வருகின்றது.

அனைத்தையும் விட இதில் கட்டணம் மிக குறைவாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் போது மிக குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து பயணிக்க விரும்பினால் நீங்கள் ஏசி கோச்சுடன் ஒப்பிடும்போது ஸ்லீப்பர் கோச் தேர்வு செய்யலாம். இவை இரண்டையும் ஒப்பிடும்போது ரயிலின் ஜெனரல் கோச் கட்டணம் மிகவும் குறைவு. இது முன்பதிவு செய்யப்படாத கோச் அல்லது ஜெனரல் கோச் என்றும் அழைக்கப்படுகின்றது. ரயில்களில் பொது பெட்டி கட்டணம் மிகவும் குறைவு. நீங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணிக்க விரும்பினால் இந்த கோச்சில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுத்து பயணம் செய்யலாம்.