மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்திரனில் ராய் என்பவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அறையை காலி செய்யும்போது ஹோட்டலுக்கு பில் செலுத்தாமல் தவிர்த்து உள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணம் தான் மிக முக்கியமானது. தன்னை RAW உளவு பிரிவின் அதிகாரி என்றும் அரசு சார்ந்த ரகசிய ஆபரேஷன் ஒன்றில் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் கூறி பில் கட்ட மறுத்துள்ளார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் இந்திரனில் ராயிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் இதே போன்று தான் RAW அதிகாரி என்று கூறி பல இடங்களில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.