சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனந்தன் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆனந்தன் குடும்பத்தினர் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தன் சொந்தமாக பிரின்டிங் பிரஸ் நடத்தியுள்ளார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பிரஸ்சை விற்றுவிட்டு வேறொருவர் பிரஸ்சில் சம்பளத்திற்காக வேலை பார்த்து வந்தார்.

சொந்தமாக நடத்திய பிரின்டிங் பிரஸ்சால் அதிக கடன் ஏற்பட்டு அதனை அடைக்க முடியாமல் ஆனந்தன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.