
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி விசாலை பகுதியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். விஜயின் முதல் மாநாடு முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகியும் அது தொடர்பான பேச்சுக்கள் இன்னும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் இருக்கிறது.
#OneMonthofVettrikKolgaiThiruvizha#வெற்றிக்கொள்கைத்திருவிழாhttps://t.co/KomQEzisZZ
— TVK Vijay (@tvkvijayhq) November 27, 2024
நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிலையில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் முதல் மாநாடு நிறைவடைந்து ஒரு மாதம் ஆகும் நிலையில் தற்போது நடிகர் விஜய் முதல் மாநாடு மற்றும் பூமி பூஜை ஆகியவற்ற இணைத்து ஒரு திரைப்படம் போன்று பிரம்மாண்ட வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மாநாட்டில் நாம் பார்த்திடாத பல்வேறு விஷயங்கள் இந்த வீடியோவில் இருக்கிறது. மேலும் இந்த வீடியோவை நடிகர் விஜயின் ரசிகர்கள் அதிக அளவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.