
பிரபல youtube நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கி. இவர் தனது 2014 ஆம் ஆண்டு முதல் youtube தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரியில் தன் பதவியை சூசன் ராஜினாமா செய்தார். இவர் கடந்த 2 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு google சிஇஓ சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் 2 வருடங்களாக புற்றுநோயால் போராடி வந்த என்னுடைய நண்பன் சூசன் உயிரிழந்துள்ளார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் google நிறுவனத்தின் வரலாற்றில் அவர் மிக முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.