
உலகில் ஆடம்பர கார்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக rolls-royce நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் வடிவமைப்பு குழுவின் தலைவர் ஆக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இயன் கெமரூன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் பின்னர் ஓய்வு பெற்றார். இவருக்கு வயது தற்போது 75. இவர் ஜெர்மனியில் ஓய்வுக்கு பிறகு தன் மனைவியுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன் மனைவி கெலோஸ் உடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது சில மர்ம நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி திருடுவதற்காக நுழைந்தனர். இவர்களை தடுக்க இயன் முயற்சி செய்தார். அப்போது அவரை கத்தியால் குத்தி பயங்கரமாக கொலை செய்தனர். அதன்பின் அவருடைய மனைவியையும் அவர்கள் கொடூரமாக தாக்கிய நிலையில் அவர் அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து உயிர் தப்பிவிட்டார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இயனின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தினால் படுகாயம் அடைந்த அவருடைய மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.