
இந்திய சினிமாவின் மூத்த பாடகி ஆஷா போஸ்லே (90). இவர் மறைந்த பாடகி லதா மகேஷ்கரின் தங்கை ஆவார். பிரபல நடிகர் ராமராஜன் நடித்தார் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே பாடலை பாடியதன் மூலம் தமிழகம் முழுவதும் அவருடைய குரல் ஒலித்தது. இந்நிலையில் இவருடைய சுயசரிதை தற்போது ஸ்வரஸ்வாமினி ஆஷா என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல பாடகரான சோனு நிகாம் என்பவரும் விழாவில் கலந்து கொண்டார். இவர் ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய கால்களை கழுவியதோடு முத்தமிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#WATCH | Maharashtra: During the biography launch of Singer Asha Bhosle, Singer Sonu Nigam washed her feet as an expression of his respect and gratitude towards her. https://t.co/2F5FKbsZRT pic.twitter.com/6shtVKQpKp
— ANI (@ANI) June 28, 2024