மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் காலமானதாக கூறப்படுகிறது. அவரது இறுதி சடங்கு இன்று இரவு 8 மணிக்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.