பீகார் மாநிலம் பாட்னா நகரை சேர்ந்தவர் கோபால் கெம்கா. பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான இவர் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் கோபால் நேற்று வழக்கம்போல வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது வீட்டின் வெளியே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் மகன் மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோன்று கோபாலும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரியவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.