
பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர் தொகுப்பாளியாக இருந்தாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது பஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் வசி யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்தோடு இருப்பதால் தற்போது அவரைப்பற்றி சில செய்திகளை பார்க்கலாம்.
அதாவது வசி சச்சி ஒரு பிரபல DJ மற்றும் தொழில்முனைவோராக பணியாற்றி வருகிறார். Clique 187 எனப்படும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இசை நிகழ்ச்சிகள், கல்யாணங்கள், பிரபல நைட் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் வசி தனது DJ திறமையால் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். இளையர்களிடையே வசி ஒரு பிரபலமான DJ என பரிச்சயமாக இருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி சச்சி இருவரும் முதன்முதலில் வசி நடத்திய ஒரு நிகழ்வில் சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா தொகுப்பாளராக செயல்பட்டபோது, இருவரும் பழக ஆரம்பித்து, அது காதலாக மாறியது. கடந்த சில மாதங்களில் இருவரும் மேலும் நெருக்கமாகி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜோடிக்கு தற்போது சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.