பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சந்தானத்துடன் இணைந்து A1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரது உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.