பிரபல தெலுங்கு இயக்குனர் கே.வாசு(72) உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  கே.வாசு டைரக்டு செய்த ஸ்ரீ சீரடி சாய்பாபா திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.

மேலும் கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை டைரக்டு செய்து உள்ளார். இவருடைய தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் போன்றோரும் டைரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் கே.வாசு இறப்பிற்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.