பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டோட்ரிகோ டுடெர்டோவின். இவருடைய நெருங்கிய நண்பர் அப்போலோ குயிபோலோய். இவர் ஒரு போலி பாதிரியார் ஆவார். இவர் மீது பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில் எஃப்பிஐயின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இவர் மீது அமெரிக்க நாட்டின் நீதித்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 12 வயதுடைய சிறுமிகள் முதல் 25 வயதுடைய பெண்கள் வரை கட்டாய உடலுறவு வைத்ததாக குற்றம் சாட்டியது. அதோடு சட்டவிரோதமான பண பரிமாற்றம், அமெரிக்க தேவாலயங்களுக்கு மக்களை முறைகேடாக அழைத்து வந்தது போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தது.

இவர் தன்னை கடவுளால் நியமிக்கப்பட்ட மகன் என்றும் பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும் அழைத்துக் கொண்டார். இவரை கைது செய்ய சுமார் 2000 காவலர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவரை கடந்த 2 வாரங்களாக காவல்துறையினர் வலைவீசி தேடிய நிலையில் நேற்று முன்தினம் தான் அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.