
பிரதமர் மோடியினால் ஈர்க்கப்பட்டு தான் அரசியலுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர், “பிரதமர் மோடியை பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதர் பிரதமர் நரேந்திர மோடி வழியில், தமிழ்நாட்டில் நேர்மையான மற்றும் மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்ல நான் விரும்புகிறேன்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.