திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண் சிலையாக செய்வதை ரஞ்சித் வழக்கமாக வைத்துள்ளார். இதனையடுத்து ரஜினியின் தாய், தந்தை உருவ பொம்மையை தத்ரூபமாக செய்து அதனை நடிகர் ரஜினிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள பாத யாத்திரையை நினைவு கூறும் பொருட்டு “என் மண்; என் மக்கள்” என்ற வாசகத்துடன் இந்திய பிரதமரான திரு.மோடியின் உருவ பொம்மையை களிமண்ணால் செய்து அசத்தினார். அந்த பொம்மையில் பிரதமர் கையில் செங்கோல் ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறார். தத்துரூபமாக பிரதமரின் உருவ பொம்மையை செய்த மண்பாண்ட கலைஞருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.