பாகிஸ்தான் நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதட்டமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

அப்போது ஒத்துழைப்பு உணர்வு பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் ஈரானுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஜிலானி தெரிவித்துள்ளார். அதோடு பாதுகாப்பு பிரச்சினைகளில் ஒத்துழைப்பு தேவைப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.