பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நாளை (ஏப்ரல் 21) நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு சுமார் 30 லட்சம் செலவில் மலர்களால் மணமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாணம் நாளை காலை 8.35 மணிக்கு தொடங்க இருக்கிறது. மேலும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.