ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் மெல்போர்ன் நகரில் பிரசித்தி பெற்ற புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் சிறந்த முறையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்த கோவிலில் திடீரென தீ பற்றியது. இந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் புத்தகோவிலுக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டனர். இதனை அடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. மேலும் புத்த கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதனால் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.