காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர்மேடு பகுதியில் அஜித்- டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குகனேஷ் என்ற பிறந்து 7 மாதமே ஆன ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான தைல டப்பாவை வழங்கியது. சிறிது நேரம் கழித்து குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது. குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பெற்றோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் தொண்டைக்கும், மூச்சுக் குழலுக்கும் நடுவே தைல டப்பா சிக்கியதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மணிமாலா மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் பாலாஜி ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி தைல டப்பாவை வெளியே எடுத்தனர். தற்போது குழந்தை நலமாக இருக்கிறது. மருத்துவர்களின் விடாமுயற்சிக்கு மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் உள்ளிட்ட மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.