
கானா பாடகியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர்தான் இசைவாணி. இவர் சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாடியுள்ள நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற பேண்ட்டில் இணைந்து பல்வேறு சுயாதீன பாடல்களையும் பாடி கவனம் பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சுமார் 49 நாட்களில் இருந்து வெளியேறிய இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பிஸியாக பாடி வருகின்றார்.
அதே சமயம் அடிக்கடி சில பாடல்களை பாடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது இசைவாணி லேட்டஸ்ட் ஆக ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஹேர் ஸ்டைல் மாற்றி மூக்கில் ஒன்றை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கின்றார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம இசைவாணியா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.