நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களின் ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் வங்கி கணக்குடன் இணைக்காத விவசாயிகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படாது எனவும் திட்டவட்டமாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 5 ஆயிரத்து 817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றும் அவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் எனவும் வங்கி கணக்கு இல்லாதவர்கள் இந்தியா பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.