இந்தியாவில் கைவினை தொழிலில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சிறுபான்மை இன மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மத்திய அரசு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கலகத்தின் மூலமாக மரபு வழி கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகின்றது.

இதற்கு 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும் எனவும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு நான்கு சதவீதம் வட்டியும் ஆண்களுக்கு ஐந்து சதவீதம் பற்றியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிவதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.