மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 முறை ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.6000 விவசாய பொருட்கள் வாங்குவதற்காக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டுடன் வங்கிக்கணக்கை இணைப்பதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை மொத்தம் 13 தவணைத்தொகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 14-வது தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் கண்கரா அவர்கள் மாவட்டத்தில் 11229 விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

அதோடு இதில் கேஒய்சி மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடிக்காமல் இருக்கும் விவசாயிகளுக்காக மாவட்டத்தில் நாளை முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு பகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். அந்த வகையில் நாளை ஊட்டி வட்டாரத்தில் இத்தலார் வேளாண் கிடங்கு அலுவலகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாம்களில் பங்கேற்று விவசாயிகள் பயனடைய வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.