யாரோ தமிழக வெற்றி கழகத் தலைவரை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று  கொங்குநாடு மக்கள் தேசம் கட்சி ஈஸ்வரன் கிண்டல் செய்துள்ளார்.

செய்தியார்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன், “கொங்குநாடு மக்கள் தேசம் கட்சியின் சார்பாக பிரஷாந்த் கிஷோரை சந்திக்கலாம் என்று இருந்தோம். அடுத்து எங்கள் ஆட்சி வருவதற்காக பிரசாந்த் கிஷோரை நாங்கள் அழைத்து வரவேண்டும் என்று எங்களுடைய தலைவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அதாவது பிரசாந்த் கிஷோரை வைத்தால் உடனே ஆட்சிக்கு வந்து விட முடியுமா? யாரோ ஏமாற்றுகிறார்கள் பிரசாந்த் கிஷார் பருப்பு பீகாரில் வேகவில்லை. எடுபடவில்லை. அதாவது என்னவென்றால் ஆட்சியில் இருக்கிறவர்கள், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் அவர்களோடு சேர்ந்து ஆட்சிக்கு வர வைத்திருப்பது நடந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 2021ல் பிரசாந்த் கிஷோரா வியூகம் வகுத்தார். திராவிட முன்னேற்ற கழகம் அப்போது 21 இல் ஆட்சிக்கு வருவது உறுதி தான். பிரசாந்த் கிஷோர் வந்ததால்தான் ஆட்சிக்கு வந்தது என்று அர்த்தம் அல்ல. அவர் தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பது வழக்கம்.

நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக  நியமிக்கப்பட்டாரா என்று தெரியாது. அப்படி இருந்தால் யாரோ தமிழக வெற்றி கழகத் தலைவரை ஏமாற்றி இருக்கிறார்கள். அவர் ஏமாறாமல் இருந்தால் சரி” என்று கூறியுள்ளார்.