வியட்நாமில் ஒரு உணவக ஊழியர் இந்தியத் தொலைக்காட்சித் தொடரான தமிழில் ‘மண் வாசனை’ மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவிலிருந்து வியட்நாம் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், அங்குள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும்  ஊழியரிடம் இந்திய சினிமா குறித்துப் பேசியபோது, அந்த ஊழியர் தனக்கு பாலிவுட் நட்சத்திரங்களை விட மண் வாசனை தொடரும் அதன் நாயகி ஆனந்தியும் தான் மிகவும் பிடிக்கும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவயதில் பள்ளி முடிந்து வந்தவுடன் தனது குடும்பத்துடன் ஆர்வமாக இந்தத் தொடரைப் பார்த்த நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்ட விதம் பலரது இதயங்களை வென்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, நடிகை அவிகா கோர் இதற்கு மகிழ்ச்சியுடன் எதிர்வினையாற்றியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், “இது எனது நாளை அழகாக்கிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Juhi Ghodgaonkar (@juhihehehehe)

“>

மேலும், எல்லைகளைக் கடந்து ஒரு கலைப்படைப்பு மக்களைச் சென்றடைவதைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், “ஆனந்தி நிச்சயமாக மகிழ்ச்சி அடைவாள்” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு இந்தியத் தொடர் வியட்நாமிய இளைஞரின் பால்ய கால நினைவுகளில் இவ்வளவு ஆழமாகப் பதிந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.