நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதிறிட்டு இருக்கீங்க. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தினால் தான் அது வன்புணர்வு விருப்பத்துடன் வந்தால் அது வேறு. அந்த பொம்பள சொல்லுதுன்னு நீங்களும் அதை நம்பிட்டு பேசிட்டு இருக்கீங்களே என்று பேசினார். சீமானின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்கள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் இதைப்பற்றி கேட்க வேண்டும். கட்சியில் இருக்கும் பெண்கள் இதை கேட்க வேண்டும். பெண்களை கேவலமாக பேசுவதை எப்படி சகித்துக் கொண்டு எப்படி அந்த கட்சியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிட பெரியாரை கேவலப்படுத்த முடியாது. அதனால் இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு தகுதி வாய்ந்த விஷயமே இல்லை என கூறினார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் சீமான் ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, வழக்கு நிலுவையில் இருக்கும் போது பாலியல் குற்றவாளி என்று என்னை எப்படி கூறுவீர்கள்? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன்? என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?” என கூறியுள்ளார்.