
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருசிற்றம்பலம், சர்தார், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் படங்களில் பிஸியாக நடித்த வரும் நிலையில் அவ்வப்போது சமூக விஷயங்களிலும் ஆர்வம் காட்டி அது தொடர்பாக பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களுக்கு நடிகை ராசி கண்ணா வரவேற்பு கொடுத்துள்ளார். மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்றும் கூறியுள்ளார்.