
கேரளா மாநிலம் எடவாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவரது நண்பர் கிருஷ்ணன் சிவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வேலையின் காரணமாக டவுன் பகுதிக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு டவுன் பகுதிக்கு செல்வதற்கு சாலை மற்றும் பாலம் வசதி இல்லாத காரணத்தால் அருகிலுள்ள ஆற்றை நீச்சல் அடித்து கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளன்று முருகன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால் கிராமத்திற்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவர்கள் ஆற்றை கடந்து செல்ல முடிவெடுத்தனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் ஆற்றை கடந்து செல்வதற்காக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நீந்தி கொண்டிருந்தனர். அப்போது கனமழையின் காரணமாக திடீரென்று ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. இதில் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் வெள்ளம் அடித்து சென்றது.
பின்பு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாதவர்களை தேடிய குடும்பத்தினர் காவல்துறைனர்க்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடி வந்தனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் இவர்களது உடலை 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்பு கண்டெடுக்கப்பட்டறனர். இவர்களது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.