
திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு பெண்கள் மூதாட்டியின் செயினை பறித்துள்ளனர். அவர்கள் 3 சவரன் தங்கச் செயினை பறித்த நிலையில் சக பயணிகள் அலறவே இந்த பெண்கள் நைசாக தப்ப முயன்றனர்.
உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் அந்த பெண்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த இரண்டு பெண்களையும் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.