டெல்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இஷா குப்தா என்ற 14 வயது மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பள்ளியில் வைத்து ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிவடைந்து மாணவர்கள் அனைவரும் வெளியே வந்த நிலையில் 7-ம் வகுப்பு மாணவன் ஒருவனது தலைமையில் சக மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுவனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 மாணவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.