ஆந்திர மாநிலம் அனந்பூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பார்ப்பதற்கு பொம்மை போல காட்சியளிக்கும் கோழியை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இந்த கோழி பற்றி இர்பான் கூறியதாவது, கோழியை பார்ப்பதற்கு பொம்மை போல தோற்றமும் அவற்றின் இறகு பட்டு போன்றும் காட்சியளிக்கும். இந்த கோழிக்கு சீன பாண்டம் என்று பெயர். இவற்றிற்கு தலை முதல் கால் வரை மென்மையான வெள்ளை சிறகுகள் உண்டு.

இந்த பொம்மை போல் காட்சியளிக்கும் கோழியை பார்ப்பதற்கேன பலர் தன்னுடைய‌வீட்டிற்கு வருவதாக இர்பான் கூறியுள்ளார். இவற்றின் இறைச்சியை சாப்பிடலாம் ஆனால் பலரும் இந்த கோழியே வளர்ப்பதற்கே ஆசைப்படுவர். இந்த கோழியால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது. 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால் கோழியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இர்பான் கூறினார்.