தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் மாநாட்டின் போது அவர்கள் பாசிசம் என்றால் நீங்க என்ன பாயாசமா என்று கேட்டார். அவர் பேசிய இந்த வசனத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமாவில் வரும் வசனம் போல் இருப்பதாக கூறினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிதம்பரம் கூட பாசிசம் மற்றும் பாயாசம் என்பதெல்லாம் சினிமா வசனம். இதுபோன்ற சினிமா வசனங்களை கொள்கையாக மாற்றி விடாதீர்கள் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் தன் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று திமுகவை சுட்டி காட்டி அரசியல் எதிரி என்று அறிவித்தார். அதோடு பாஜகவையும் பெயிண்ட் டப்பா என்று மறைமுகமாக விமர்சித்தார்.

நடிகர் விஜய் திமுகவை நேரடியாக அரசியல் கட்சி என்று அறிவித்துவிட்ட நிலையில் இது குறித்து திமுகவினர் பதில் சொல்ல மறுக்கிறார்கள். நடிகர் விஜய் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பொதுச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் காலம் காத்தாலே திமுகவை வம்புக்கு உள்ளனர். அதாவது எல்லோரும் பாயாசம் சாப்பிடுங்க என்று எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளனர். மேலும் அவர்கள் திமுகவை வம்பு இழுத்து தான் இப்படி ஒரு போஸ்டரை போட்டுள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.