நிர்மலா சீதாராமன் அவர்கள் பாப்கானுக்கு விதிக்கப்பட்ட வரியை வெளியிட்டதிலிருந்து அது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் “எந்த அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. பாப்கானுக்கு ஜிஎஸ்டி போட்டது கண்டிக்கத்தக்கது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாப்கான் போன்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக்கு கூறியுள்ளார்.