இந்தியாவில் ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பான் கார்டுகள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக பான் கார்டு ஆதாரங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கிராமப்புற மக்களுக்கு தபால் நிலையங்களில் அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிப்பது சாத்தியமில்லை எனவும் பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்புக்காக கட்டணத்தை விளக்குவது இதற்கு முன்னதாக கட்டணம் செலுத்திய மக்களுக்கு அநீதியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.