
மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு காரின் மீது மோதியது.
இதனால் காரில் இருந்த ஏர் பேக் வெளியில் வந்துள்ளது. ஓட்டுநர் ஏர்பேக் சிறுவனின் தந்தையை பாதுகாத்த நிலையில் சிறுவன் அமர்ந்து இருந்த சீட்டுக்கு எதிரே இருந்த ஏர் பேக் திடீரென வெடித்து விட்டது. இதில் ஹர்ஷ் மயங்கி விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.