
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் பைரவ் என்ற கிராமம் உள்ளது. இங்கு சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் நேற்று முன்தினம் மாலை 2 வயது குழந்தை தவறி விழுந்தது. கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் அந்த பாதாள சாக்கடை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அந்த இடத்திற்கு தீயணைப்பு துறையினர் உட்பட கிட்டத்தட்ட 60 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 24 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாதாள சாக்கடையில் விழுந்த அந்த குழந்தையை நேற்று சடலமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.