ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் ராய்ப்பூர் நகருக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன் மது குடித்ததால் அவரின் மடியில் உட்கார்ந்து இந்த பெண் காரை ஓட்டியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் 3 பேர் மீது மோதி அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.