கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு  பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பாஜகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.