நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் கட்சி தொடங்கியது முதல் அவரை ஆதரித்து வந்தார். ஆனால் முதல் மாநாடு முடிவடைந்த பிறகு நடிகர் விஜயை அவர் விமர்சித்து வரும் நிலையில் சாட்டை துரைமுருகன் தன்னுடைய x பக்கத்தில் விஜய் மற்றும் அவருடைய ரசிகர்களை சீண்டி பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சீமான் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் பாஜக மற்றும் திமுக நேரடியாகவே உறவில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதன் பிறகு கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய சீமான் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேர்தலில் சமமாக போட்டியிட வாய்ப்பு கொடுப்போம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் சீமான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய ஒரு வீடியோ மற்றும் பாஜக கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு புகைப்படம் போன்றவற்றை விஜய் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலவசத்தை ஒழித்து அந்த மாநிலத்தை முன்னேற்றம் அடைய செய்தார் என்றும் ஒரு லட்சம் கோடி கடன் இருந்ததை அவர் பொறுப்பேற்ற பிறகு அடைத்து விட்டு அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக பாடுபட்டார் எனவும் மோடியை பலவாறு புகழ்ந்து ‌ பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் மிஸ்டர் சாட்டை இதை கொஞ்சம் பாருங்க என்ற விதத்தில் அதனை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.