
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அவருடைய மனைவி ரிவாபா ஜடேஜா எக்ஸ் பகுதியில் போட்டோவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இந்நிலையில் தற்போது அவருடைய கணவர் ஜடேஜாவும் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.