நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அமித்ஷா அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக எம்பிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி மண்டை உடைந்தது. இவர் தான் படிக்கட்டுக்கு அருகில் நின்ற போது ஒரு எம்பி யை ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் அவர் என் மீது விழுந்ததில் கீழே விழுந்ததால் தான் தனக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்ததாக கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பாஜக எம்பி ஆன முகேஷ் ராஜ்புத் என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இவர்கள் இருவரிடமும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செல்போனில் தொடர்பு கொண்ட நலம் விசாரித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாஜக எம்பிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக அவர் மீது கொலை முயற்சி புகார் டெல்லி காவல் நிலையத்தில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.