தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புதிய கட்சியை தொடங்கி உள்ள நண்பர் விஜய் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். அதை பார்க்கும்போது விஜய் பேசாமல் திமுகவில் இணைந்து விடலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இத்தனை நாட்களாக திமுக சில விஷயங்களை கிளிப்பிள்ளை போல் சொல்லி வந்த நிலையில் அதே விஷயங்களை தான் மீண்டும் விஜய் சொல்லியுள்ளார்.

திமுகவின் கொள்கைகளை விஜய் மீண்டும் மீண்டும் சொல்வதால் கண்டிப்பாக பாதிப்பு விஜய்க்கு தான். பாஜகவுக்கு எத்தனை பீ‌ டீம் தான். கட்சி தாங்காதுங்க. முதலில் சீமானை சொன்னீர்கள். இப்போது விஜயை சொல்கிறீர்கள். மேலும் எப்போது விஜய் ஒன்றிய அரசு என்று கூறினாரோ அப்போதே அவர் உங்கள் சித்தாந்தம் தான் என்றார்.